“கடைசி நிமிடத்தில் குஷ்பு வர மறுத்த காரணம்; இலங்கை கலைநிகழ்ச்சியில் நடந்ததென்ன?" – கலா மாஸ்டர்

‘எங்க மக்கள் வறுமையில் இருக்கும் சூழலில் தமிழ்நாட்டிலிருந்து கலை நிகழ்ச்சிங்கிற பெயரில் நடிகர் நடிகைகள் வந்துட்டுப் போறது சரியில்ல, ‘குஷ்பு கூட போட்டோ எடுக்கணும்னா முப்பதாயிரம் ரூபாயாம். எங்க பசங்களைத் திசைதிருப்புகிற இந்த வேலைகளையெல்லாம் நாங்க அனுமதிக்க முடியாது’ என்கிற ஒரு சாராரின் கண்டனம் ஒருபுறம்..

‘நிகழ்ச்சி பாதியிலேயே முடிஞ்சிடுச்சாமே; தமன்னா ஆடிட்டிருக்கிறப்பவே ஸ்டேஜ்ல ஏறிட்டாங்களாம் சிலர்’ எனத் தாறுமாறாகப் பரவி வரும் தகவல்கள் மறுபுறம். நிகழ்ச்சி முடிந்த பிறகும் ஏற்பாடு செய்த கலைஞர்கள் சிலருக்கு ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர் அடித்து ஒட்டுமளவுக்கு எதிர்ப்பைக் காட்டி வரும் சிலர் இன்னொருபுறம்..

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் கலந்து கொண்ட கலைநிகழ்ச்சி

இலங்கை யாழ்ப்பாணத்தில் தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் கலந்து கொண்ட கலைநிகழ்ச்சி தொடர்பான தகவல்கள்தான் இவை. நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியான நிலையில், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடன இயக்குநர் கலா மாஸ்டரிடம் பேசினோம்.

‘தமன்னா, யோகிபாபு  உள்ளிட்ட நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்ட சினிமா நடிகர் நடிகைகளாகட்டும், ஸ்கிட், டான்ஸ்னு ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பின்னாடி ஒர்க் பண்ணின டெக்னீஷியன்களாகட்டும், எங்க எல்லாருக்குமே இந்த நிகழ்ச்சி பெரிய சந்தோஷத்தையே தந்தது.

நாங்க எதிர்பார்த்த கூட்டம் 45,000 பேர் வரைதான். அதுக்கேத்தபடிதான் டிக்கெட் கொடுக்கப்பட்டுச்சு. ஆனா இலவசமா பார்க்க வந்த கூட்டம் அதிகமாகிடுச்சு. மொத்தமா ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் வரை கூடிட்டாங்க. எப்பவுமே பெரிய கூட்டம்னா அதுல ஒரு குரூப் சேட்டை பண்றதுக்குனுதானே வருவாங்க. அப்படி வந்த சிலரால பதினைந்து முதல் இருபது நிமிஷம் சின்னதா சலசலப்பு உண்டானது. ஆர்ட்டிஸ்டுகளைப் பார்க்கணும்கிற ஆர்வத்துல, கேமரா பொருத்தப் பட்டிருந்த சாரங்கள், பக்கத்துல இருந்த மரங்கள்னு இளவட்டப் பசங்க ஏறினதுல அவங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்திடுமோனுதான் எங்களுக்கு பயம்.

கலா மாஸ்டர்

அதனால சில நிமிடங்கள் நிகழ்ச்சியை நிறுத்திட்டு அவங்ககிட்ட ரெக்வஸ்ட் பண்ணி அமைதியா ஒத்துழைப்புத் தரச் சொல்லிக் கேட்டோம். பிறகு போலீசுமே தலையிட்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்தியதுல இருபது நிமிஷத்துக்குள்ளேயே எல்லாம் சரியாகிடுச்சு. நடந்தது இதுதான். ஆனா நிகழ்ச்சி தொடர்பான வதந்திகள் எப்படி ஓவர் நைட்டுல பரவுச்சுனு தெரியலை. சமூக ஊடகங்கள்ல வந்த தகவல்கள்ல அநியாயத்துக்குப் பொய். இப்படியொரு பெரிய நிகழ்ச்சி அங்க இதுவரை நடந்ததில்லையாம். அதுவும் போக, இந்த நிகழ்ச்சியிலயுமே உள்ளூர்ல அதாவது யாழ்ப்பாணத்துல இருந்தே நிறைய டெக்னீஷியன்களைக் கூப்பிட்டிருந்தோம்.

தவிர, கலாட்டா பண்ணினவங்களுமே இஙகிருந்து போயிருந்த நம்ம ஆர்ட்டிஸ்டுகளை எந்தத் தொந்தரவுமே செய்யலை. வந்திருந்த கூட்டத்துலயேதான் ரெண்டு தரப்பா பிரிஞ்சு மோதிக்கிட்டாங்க. ஆனா போலீஸ் நமக்கு நல்ல சப்போர்ட் தந்தாங்க. தமன்னா டான்ஸ் ஆடியதும் நிகழ்ச்சியை முடிச்சுட்டாங்கன்னு சொல்றாங்க. அவங்க டான்ஸ்தான் கடைசியா வச்சிருந்தோம். இது தெரியாம தப்பு தப்பா செய்தி பரப்பிட்டிருக்காங்க.

ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி

எனக்குத் தெரிய இந்த மாதிரி தகவல் பரப்புறதுமே சில சின்னக் கூட்டம்னுதான் சொல்வேன். முதல்ல  குஷ்புதான் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கறதா திட்டமிட்டிருந்தோம். அது தொடர்பா சின்னதா ஒரு அறிவிப்பு செஞ்சதுமே இந்த கும்பல்தான் ‘குஷ்பு இலங்கை வரக்கூடாது’னு சொன்னாங்க. குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தப்ப என்னவோ பேசினதா சொல்லி எதிர்த்தாங்க. எனக்கு அது தொடர்பா டீடெய்லா தெரியல. ஆனா அது ஒரு அரசியல் காரணம்னு மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும்.

அதனால குஷ்புவே ‘சரி, தேவையில்லாத சர்ச்சைக்கு இடம் கொடுக்க வேண்டாம், நான் வரலை’ நீங்க போயிட்டு வாங்க’னு சொல்லிட்டாங்க. அதனாலதான் குஷ்புவுக்குப் பதிலா டி.டி.யை நிகழ்ச்சியை ஹோஸ்ட் பண்ணக் கூட்டிட்டுப் போனோம்.

கலா மாஸ்டர்

இதே கூட்டம்தான் இப்ப ரம்பா கணவர் குறித்தும் பேசிட்டிருக்காங்க. எங்களைப் பொறுத்தவரை நிகழ்ச்சி எந்தவித பிரச்னையுமில்லாம முடிஞ்சுடுச்சு” என்கிறார் கலா மாஸ்டர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.