மும்பை காங்கிரஸ் கட்சியில் இருந்து மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் அசோக் சவான் விலகி உள்ளார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.பாஜக. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் தேர்தல் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி வருவது அக்கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தி […]
