கடந்த வருடம் (2023) நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டு தரம் 6 இல் சேர்வதற்கான மேல்முறையீடுகளை 2024. 02. 13 ஆம் திகதி முதல் 2024. 02. 29 வரை இணையவழி ஊடாக மாணவர்கள் சமர்ப்பிக்க முடியும்.
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk ஊடாக பிரவேசித்து அதிகபட்சமாக மூன்று பாடசாலைகளுக்கான மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என்பதுடன், http://g6application.moe.gov.lk ஊடாக நேரடியாக மேன்முறையீடுகளை முன்வைக்க முடியும்.