யாழ்ப்பாண மாவட்ட விவசாய அபிவிருத்தி குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (09.02.2024) காலை ஒன்பது மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் தென்னை மரங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள், கிருமிநாசினி பாவனை, நெல் உற்பத்தி மற்றும் நெல் அழிவுகள், சிறுதானிய ஊக்குவிப்புகள், பழமர உற்பத்திகள், காப்புறுதி நடவடிக்கைகள், நன்நீர் மீன் உற்பத்தி, பனம் விதைகளை நாட்டுதல் மற்றும் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் ( காணி), மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர்,பிரதேச செயலாளர்கள், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர், விவசாய திணைக்களத் தலைவர்கள், கமநல சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் துறைசார் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.