வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ‛‛இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க பா.ஜ., அரசு எப்போதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது” என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.
இது குறித்து அனுராக் தாக்கூர் கூறியதாவது: ஓராண்டிற்குள் 10 லட்சத்துக்கும் அதிகமான அரசு வேலைகள் வழங்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ., அரசு, நாட்டில் 47 இடங்களில் வேலைவாய்ப்பு முகாமின் கீழ் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை இன்று வழங்கியது.
இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க பா.ஜ., அரசு எப்போதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து வருகிறார். நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அக்கறை
கத்தாரில் மரண தண்டனையை எதிர்கொண்ட 8 கடற்படை வீரர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இது, ‛‛ குடிமக்களை பாதுகாக்கும் பா.ஜ., அரசின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியது. ஒவ்வொரு இந்தியனின் உயிரிலும் மோடி அரசு அக்கறை கொண்டுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement