அபுதாபி, ஐக்கிய அரபு எமிரேட்சின், அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ‘அஹலான் மோடி’ அதாவது, ‘வணக்கம் மோடி’ என்ற நிகழ்ச்சியில், இந்தியர்களிடையே பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:
ஐக்கிய அரபு எமிரேட்சின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ள நீங்கள், ஒரு புதிய வரலாற்றை எழுதியுள்ளீர்.
பல்வேறு இடங்களிலிருந்து வந்தாலும், உங்கள் அனைவரது இதயங்களும் ஒரே நோக்கத்துக்காக இணைக்கப்பட்டுள்ளன. இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான நட்புறவை போற்றுவதற்கான நேரம் இது. இங்கு கூடியிருப்போரின் இதயத் துடிப்பும் அதே உணர்வை எதிரொலிக்கிறது-. இந்தியாவும், 140 கோடி மக்களும் உங்களை நினைத்து பெருமைப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் அரபு மொழியில், சில வார்த்தைகளை பிரதமர் மோடி பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement