தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நெகோண்டா கிராம மக்கள் தங்கள் ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கிக்கொண்டு ரயிலில் மட்டும் ஏறாமல் தவிர்த்து வருகின்றனர். தினமும் 60க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் வாங்கப்பட்டாலும் அதனை பயணிக்க பயன்படுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. டிக்கெட் வாங்கியும் ஏன் பயணிக்க மறுக்கிறார்கள் என்பது குறித்து விசாரித்த போது, ரயில்வே அதிகாரிகளின் நிபந்தனையே இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நர்சம்பேட்டா தொகுதிக்கான ஒரே நிறுத்தம் நெகொண்டா ரயில் […]