வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதற்கு தற்போது நாடு தகுந்த தருணத்தில் அல்ல – அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன

நாட்டில் வேலை நிறுத்தங்களை மேற்கொள்வதற்குத் தகுந்த தருணத்தில் அல்ல தற்போது நாடு காணப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவைப் பேச்சாளர் இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது தொடர்ந்தும் குறிப்பிடுகையில்;

நமது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியில் அரசாங்கமொன்று மக்களுக்கு நிவாரணமாக மேற்கொள்ளக்கூடிய அனைத்தும் வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, பொய் பிரசாரம் மேற்கொள்ளும் நபர்கள் தவிர்ந்த ஏனைய அறிவு சார்ந்த சகல மக்களும் அதனைத் தற்போது புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சுதந்திரத்தின் பின்னர் ஆறு வருடங்கள் தவிர்ந்த ஏனைய 70 ஆண்டுகளில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆரம்பக் கணக்கில் அதிகரிப்பை ஏற்படுத்துவதற்கு முடியாது போயுள்ளதாகவும், கடந்த காலங்களில் இடம்பெற்ற அல்லது எதிர்காலத்தில் ஏற்படும் எவ்வித அரசாங்கத்திற்கும் குறுகிய காலத்திற்குள் அந்தந்த நாளில் மேற்கொள்ளப்படும் செலவை செய்வதற்கு போதிய வருமானமில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் வலியுறுத்தினார்.

தற்போது மேற்கொள்ளக்கூடிய சகல கோரிக்கைகளையும் வழங்குவதற்கு முடியுமாயின் அரசாங்கம், நிதி அமைச்சர் மற்றும் ஜனாதிபதி மிகவும் விரைவாக அவற்றை வழங்குவதாகவும், சம்பளம், மேலதிக கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவதற்கு முடியுமாயின் அவற்றை வழங்குவதாகவும் மேலும் தெளிவுபடுத்தினார்.

இவற்றை மக்களுக்கு வழங்க முடியாது போனமை அதிக பழு சுமத்தப்படுவதற்கு அரசாங்கத்தினால் முடியாமல் போனதனால் அவ்வாறு வழங்குவதாயின் மக்களிடம் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

2023 ஆம் ஆண்டில் திறைசேரிக்கு 3 திரில்லியன் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், 13 திரில்லியன் செலவேற்படுட்டுள்ளது. அவ்வாண்டு 10 திரில்லியன் குறைவேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் இக்கோரிக்கையை வழங்குவதற்கு மேலும் வெற் வரி மற்றும் வருமான வரியை அதிகரிப்பதற்கு அரசாங்கத்திற்கு முடியாத நிலையல் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நெருக்கடியான சந்தர்ப்பத்தில் கடுமையாக செயற்பட வேண்டிய சந்தர்ப்பத்தில் வேலைநிறுத்தம் செய்வதாயின் அது தொடர்பாக மக்கள் சிந்திக்க வேண்டும் என மேலும் அமைச்சர் வலியுறுத்தினார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.