அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்து கோயிலில் தொண்டு செய்வதற்காக உலகம் முழுவதும் இருந்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் சென்றுள்ளனர். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட ராமர் கோயிலை கடந்த மாதம் திறந்து வைத்த கையோடு பிரதமர் மோடி அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்த இந்து கோயிலை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் முன்னிலையில் நேற்று திறந்து வைத்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையின் அடையாளமாகத் திகழும் […]