சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் ஜி04 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இது ‘ஜி’ சீரிஸ் வரிசையில் வெளிவந்துள்ள போன்.
சிறப்பு அம்சங்கள்
- 6.6 இன்ச் டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- UNISOC T606 சிப்செட்
- 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- 5,000mAh பேட்டரி
- 15 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
- 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
- 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
- இதன் விலை ரூ.6,999 முதல் ஆரம்பமாகிறது
- வரும் 22-ம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது
Introducing the eagerly awaited The stunner #MotoG04! Elevate your style game with its breathtaking design, mesmerizing display, & flawless performance with Latest Android 14. Starting at just ₹6,249* @Flipkart, https://t.co/azcEfy2uaW, and all leading retail stores.#ChhaaJaoge pic.twitter.com/5iulkK1cio
— Motorola India (@motorolaindia) February 15, 2024