வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கேப்கனாவெரல்: அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, அந்நாட்டின் தனியார் லேண்டர் ராக்கெட், நேற்று நிலவுக்கு ஏவப்பட்டது. அது, வரும் 22ம் தேதி நிலவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் நாசா எனப்படும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், அங்குள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து தனியார் நிறுவனமான, ‘ஸ்பேஸ் எக்ஸ்’ பால்கான் ராக்கெட்டை நேற்று ஏவியது. இதில் உள்ள ரோபோ விண்கலம் வரும் 22ம் தேதி நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கினால், நிலவின் மேற்பரப்பை தொட்ட முதல் வணிக வாகனம் என்ற பெருமையை பெறும்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய ஐந்து நாடுகள் தான் இதுவரை நிலவில் தரையிறங்கிஉள்ளது. தனியார் நிறுவனம் எதுவும் இதுவரை நிலவை தொட்டதில்லை. அமெரிக்கா மட்டுமே நிலவுக்கு, அப்பல்லோ 17 வாயிலாக கடந்த 1972 டிசம்பரில் விண்வெளி வீரர்களை அனுப்பியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement