Pak. Imran Khan announced Omar Ayub Khan as the Prime Ministerial candidate | பாக். பிரதமர் வேட்பாளராக ஒமர் அயூப்கானை அறிவித்தார் இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 101 சுயேச்சை எம்.பி.க்களை பெற்றுள்ள இம்ரான்கான் ,ஒமர் அயூப் கான் என்பவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சமீபத்தில் பொதுத் தேர்தல் நடந்தது. இதில் ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற 101 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மேலும் பாக்., முஸ்லிம் லீக் – நவாஸ் 75; பாகிஸ்தான் மக்கள் கட்சி 54; முட்டாஹிதா குவாமி இயக்கம் – பாக்., 17 இடங்களைக் கைப்பற்றின.

ஆட்சி அமைக்க 133 இடங்கள் தேவை என்ற நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பாக்.,கில் புதிய அரசு அமைவதில் குழப்பம் நீடித்து வருகிறது..

இந்நிலையில் 101 சுயேச்சை எம்.பி.க்களை வைத்து இம்ரான் கான், நேற்று பாகிஸ்தான் பிரதமர் வேட்பாளராக ஒமர் அயூப்கானை அறிவித்தார். இம்ரானுக்கு எந்த கட்சி ஆதரவு என தெரியாத நிலையில் இந்த திடீர் அறிவிப்பு பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

முன்னதாக பாகிஸ்தான், முஸ்லிம் லீக்- பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைந்து கூட்டணி அரசு அமைக்க முடிவு செய்து, ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.