ஜியோ நிறுவனத்துக்கு போட்டியாக இருப்பது ஏர்டெல் நிறுவனம் தான். இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே கடும் போட்டி இருப்பதால், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஒருவருக்கொருவர் புதுப்புது ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. இப்போது ஜியோ அறிவித்திருக்கும் திட்டத்துக்கு வாடிக்கையாளர்கள் தினமும் 8 ரூபாய் செலவழித்தால் உங்களுக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். உடனே இந்த திட்டத்தின் விலை என்னவாக இருக்கும் என யோசிப்பீர்கள். ஜியோவின் 719 ரூபாய் திட்டத்தைப் பற்றி தான் இங்கு பார்க்க இருக்கிறோம். ஏர்டெல் நிறுவனமும் இதே விலையில் ஒரு பிளானை கொடுப்பதால், இரண்டில் வாடிக்கையாளர்களுக்கு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.
ஏர்டெல்லின் ரூ.719 திட்டம்
ஏர்டெல்லின் ரூ.719 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் வரம்பற்ற அழைப்பு, தினசரி 1.5 ஜிபி இணையம், ஏர்டெல் பயனர்களுக்கு தினசரி 100 எஸ்எம்எஸ் வசதியை வழங்குகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் 84 நாட்களுக்கு 5G அன்லிமிடெட் இணையத்தைப் பெறுகிறார்கள். மேலும், Hello Tune, Apollo 24|7, Wynk Music இன் இலவச சந்தாவும் திட்டத்தில் கிடைக்கிறது.
ஜியோவின் ரூ.719 திட்டம்
ஜியோவின் இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடன் 84 நாட்கள் பயன்படுத்தலாம். இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் குரல் அழைப்புகளை வழங்குகிறது. மற்ற நன்மைகளைப் பற்றி பேசுகையில், மூன்று ஜியோ திட்டங்களும் ஜியோ டிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான இலவச சப்ஸ்கிரிப்சனுடன் வருகின்றன.
எந்த திட்டம் உங்களுக்கு பெஸ்ட்?
இந்த இரண்டு திட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், டேட்டா பயன்பாடில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. ஜியோ இதே விலையில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை அதே நாட்களுக்கு அதே விலையில் வழங்குகிறது. ஏர்டெல் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை ரூ.719க்கு வழங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் டேட்டா பயன்பாடு அதிகமாக இருந்தால், ஜியோவின் திட்டம் உங்களுக்கு நன்றாக இருக்கும். அதாவது ஏர்டெல் நிறுவனத்துடன் ஒப்பிடும்போது ஜியோ இந்த ரீச்சார்ஜ் திட்டத்தில் 42 ஜிபி கூடுதல் டேட்டாவை கொடுக்கிறது.