Allowance to withdraw objections to UPA Act | உபா சட்டத்துக்கு எதிர்ப்பு மனுக்களை திரும்ப பெற அனுமதி

புதுடில்லி, உபா எனப்படும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை திரும்பப் பெறுவதாக, தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் தெரிவிக்கப்பட்டதை, உச்ச நீதிமன்றம் ஏற்றது.

பயங்கரவாதத்துக்கு எதிரான மிகக் கடுமையான, யு.ஏ.பி.ஏ., எனப்படும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இவை தொடர்பான விசாரணை, நீதிபதிகள் பீலா திரிவேதி, பங்கஜ் மிட்டல் அமர்வில் நேற்று முன்தினம் நடந்தது.

அப்போது, இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மட்டுமே வழக்கு தொடர வேண்டும்.

பொத்தாம் பொதுவாக வழக்குகள் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என, அமர்வு கூறியிருந்தது.

இந்நிலையில், இந்த அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்ந்திருந்த எட்டு தனிநபர் மற்றும் அமைப்புகள் சார்பில், மனுக்களை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் உரிய நீதிமன்றத்தில் முறையீடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதை ஏற்று மனுக்களை திரும்பப் பெறுவதற்கு அமர்வு அனுமதி அளித்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.