Sembai Sangeeta Utsavam | செம்பை சங்கீத உற்சவம்

பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் ஏகாதசி உற்சவம் நடப்பது வழக்கம். செம்பை குடும்பத்தினர் நடத்தும் இந்த உற்சவம் பிரசித்தி பெற்றது.

நடப்பாண்டு உற்சவத்துக்கு, இன்று மாலை கொடியேறுகிறது. இதற்கு, தந்திரி அண்டலாடி சங்கரன் நம்பூதிரிபாடு தலைமை வகிக்கிறார். உற்சவத்தையொட்டி நடக்கும் சங்கீத உற்சவத்தை நாளை மறுதினம் மாலை 6.00 மணிக்கு, பிரபல இசைக் கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார். தொடர்ந்து அவரது சங்கீத கச்சேரி நடக்கும்.

வரும், 19ம் தேதி மாலை சுகுமாரி நரேந்திர மேனனின் சங்கீத கச்சேரி நடக்கிறது. 20ம் தேதி காலை, 8:30க்கு உஞ்சவிருத்தி பஜனை, மண்ணுார் ராஜகுமாரன் உண்ணி தலைமையில் பஞ்சரத்ன தீர்த்தனை, இளம் கலைஞர்களின் சங்கீதா ஆராதனை நடக்கிறது.

மாலை 6:00க்கு சென்னை ராமநாதனின் சாக்ஸபோன், பாதிரியார் பாள் பூவதிங்கள், பிரகாஷ் உள்ளியேரி குழுவின் ஹார்மோனியம், இரவு, 9:00 மணிக்கு விஜய் ஜேசுதாஸ் கச்சேரி நடக்கிறது. வரும், 21ல் ஏகாதசி உற்சவம் நிறைவடைகிறது. உற்சவத்தின் நிர்வாகி செம்பை சுரேஷ், ஒருங்கிணைப்பாளர் கீழத்துார் முருகன், கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.