l மழை பற்றாக்குறையால் சிறிய நீர்ப்பாசன ஏரிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. குடிநீருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய ஏரிகளுக்கு அருகில் உள்ள ஆறுகளில் இருந்து, தண்ணீர் பாய்ச்சும் திட்டங்களுக்கு பெருமளவில் நிதி செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்களால், நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து, விவசாயிகளுக்கு உதவியாக உள்ளது
l குடிநீர், விவசாயம், தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீர் வினியோகிக்க, ஏரிகள் வளர்ச்சி, தடுப்பணை கட்டுவது உட்பட, 115 பணிகள் நடக்கின்றன. இதற்காக நடப்பாண்டு 200 கோடி ரூபாய் செலவிடப்படும்
l கே.சி.வேலி இரண்டாம் கட்ட பணிகள் 455 கோடி ரூபாய் செலவில் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலமாக 272 ஏரிகளை நிரப்பும் பணிகள் நடப்பாண்டு முடியும்
l ராய்ச்சூரின், சிக்கலபர்வி அருகில் துங்கபத்ரா ஆற்றுக்கு தடுப்பணை கட்டுவது; மான்வியின், குர்டி அருகில் ஏரி நிரப்பும் திட்டம்; மைசூரு, கே.ஆர்.நகரின், கெஸ்துார் கொப்பலு ஏற்ற நீர்ப்பாசனம்.
நஞ்சன்கூடின், தேவனுர் கிராமத்தின் அருகில் ஏற்ற நீர்ப்பாசன திட்டம்; சித்தாபுராவில் ஏரி நிரப்பும் திட்டம்; சொரபாவின் வரதா ஆற்றுக்கு குறுக்காக தடுப்பணை கட்டுவது; ஜூவர்கியில் தாந்தார் ஏரி நிரப்பும் திட்டம்; குகனுர், எலபுர்காவில், ஏரி நிரப்புவது; தடுப்பணை கட்டும் திட்டங்கள் 850 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement