மேற்கு வங்கத்தின் சிலிகுரி சஃபாரி பூங்காவில், சீதா, அக்பர் என்ற பெயர்களைக் கொண்ட சிங்கங்கள் இருப்பதால், மாநில வனத்துறைக்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மனு தாக்கல் செய்திருக்கும் சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.
இந்த விவகாரத்தில், `மேற்கு வங்க வனத்துறை சிங்கங்களுக்கு பெயரிட்டுள்ளது. அக்பர் புகழ்பெற்ற முகலாய பேரரசர்களில் ஒருவர். சீதா ராமாயணத்தில் ஒரு பாத்திரம். இந்து மத வழக்கங்களில் சீதை தெய்வமாக கொண்டாடப்படுகிறார்.இதனால், இந்துக்களின் மனதை வனத்துறை புண்படுத்திவிட்டது’ என்ற குற்றச்சாட்டுடன் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் சர்க்யூட் அமர்வை அணுகிய விஷ்வ ஹிந்து பரிஷத், சிங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் என வனத்துறைக்கு எதிராக நேற்று மனு தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணை பிப்ரவரி 20-ம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது. இன்னொருபக்கம் இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த வனத்துறை, `பிப்ரவரி 13-ம் தேதி பூங்காவுக்கு, திரிபுராவிலுள்ள செபஹிஜாலா விலங்கியல் பூங்காவிலிருந்து சிங்கங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், சஃபாரி பூங்காவுக்கு சிங்கங்கள் வந்த நாள்முதல் அதன் பெயர்கள் மாற்றப்படவில்லை’ என்று தெரிவித்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY