கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கும் பொருந்தலூர் ஊராட்சியில் உள்ள தெலுங்குபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார். இவரின் மனைவி கலைச்செல்வி (வயது 21). இந்நிலையில், கலைச்செல்வி தெலுங்குபட்டி பேருந்து நிறுத்தத்தில் இருந்து தோகைமலை வருவதற்காக அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்து தோகைமலை பேருந்து நிலையத்தில் இறங்கியிருக்கிறார். அப்போது, அவரின் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்கச் செயினை மர்ம பெண் அறுத்துக் கொண்டு ஓடியிருக்கிறார்.
இதனால், அதிர்ச்சியடைந்த கலைச்செல்வி, ‘என் செயினை ஒரு பெண் பறித்துக் கொண்டு ஒடுகிறா. அவளை பிடிங்க’ என்று கத்தியுள்ளார். அவரின் கூச்சல் கேட்டு பேருந்து நிலையத்திலும், அவர் பயணித்த பேருந்திலும் இருந்த பொதுமக்கள் சிலர் அந்த பெண்ணை பிடித்து, அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். அப்போது, இந்த பெண்ணுடன் மேலும் 3 பெண்கள் செயின் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனால், அந்த நான்கு பெண்களையும் பொதுமக்கள் சரமாரியாக அடித்து, அதன்பிறகு தோகைமலை காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தோகைமலை போலீஸார் விசாரணையில், அவர்கள் நால்வரும் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுக்கா, ராஜகோபால் நகர், மந்திதோப்பு பகுதியைச் சேர்ந்த பாண்டி மாணிக்கம் மனைவி அபிராமி (30), அதே பகுதியைச் சேர்ந்த மணி மனைவி செல்வி (28), பாபு மனைவி ஜோதி (\39), ராஜா மனைவி காளீஸ்வரி (38) என்பது தெரியவந்தது.
அதன்பிறகு, தோகைமலை காவல் நிலைய போலீஸார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நான்கு பெண்களையும் கைது செய்து. குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். பேருந்தில் இளம்பெண் ஒருவரிடம் நகையைப் பறித்து நான்கு பெண்கள் பொதுமக்களால் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY