யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களை அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்தித்துள்ளார். அங்கு அவர்களின் சுகநலம் பற்றி விசாரித்துள்ளதுடன், விரைவில் நாடு திரும்பக்கூடிய சூழல் உருவாகும் எனவும் அவர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குறித்த மீனவர்களின் விடுதலை சம்பந்தமாக நீதி அமைச்சர், கடற்றொழில் அமைச்சர் மற்றும் இந்திய தூதுவர் ஆகியோருடன் தான் கலந்துரையாடல் நடத்தியுள்ளேன் என்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது முகநூல் பதிவில் வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..
மீனவர் பிரச்சினையென்பது இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினையாகும், இது இராஜதந்திர ரீதியில் தீர்க்கப்பட வேண்டியதொன்றாகும். நெடு நாட்கள் நீடிக்கும் இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என கருதுகின்றேன் என்றும் பதிவிட்டுள்ளார்.