மருத்துவ கல்வி:
l மருத்துவ கல்லுாரிகள் கட்டவும், உபகரணங்களை வாங்கவும் 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் கட்ட, 130 கோடி ரூபாய் செலவிடப்படும்
l மைசூரில் உள்ள 40 படுக்கைகள் கொண்ட நெப்ரோ யூராலஜி மருத்துவமனை, 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்
l கலபுரகி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனை திறக்கப்படும்.
l கதக், கொப்பால், சாம்ராஜ்நகரில், 450 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. தேவையான உபகரணங்கள் வாங்க, 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
l பெங்களூரின் நெப்ரோ யூராலஜி மருத்துமவமனையின், அறுவை சிகிச்சை பிரிவில், 20 கோடி ரூபாய் செலவில், ரோபோடிக் இயந்திரத்தின் மூலம் அறுவை சிகிச்சை செய்ய, நடவடிக்கை
l மருத்துவ கல்லுாரிகளின், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையகளில், 177 கோடி ரூபாய் செலவில், 114 ‘Modular OT’ அமைக்கப்படும்
l கதக் மருத்துவமனையில், 10 கோடி ரூபாய் செலவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கார்டியாக் யூனிட் அமைக்கப்படும்.
l மருத்துவ கல்வித்துறைக்கு உட்பட்ட, மருத்துவமனைகளில் 32 கோடி ரூபாய் செலவில், 64 அனஸ்தீஷியா ஒர்க் ஸ்டேஷன் வாங்கப்படும்
l நடப்பாண்டு ராய்ச்சூர், மைசூரு, பல்லாரி ஆகிய மாவட்டங்களில், புதிய தாய்ப்பால் வங்கி
l குடகு மருத்துவமனையில், அபாயகரமான தொற்று நோய்களை கண்டுபிடிக்க, தொற்று கண்டுபிடிப்பு ஆய்வகம்.
l பொது மக்களின் அனைத்து ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை, டிஜிட்டல் முறையில் சேகரிக்க, ‘டிஜிட்டல் ஹெல்த் சொசைட்டி’ துவக்கப்படும்
l சித்ரதுர்கா மாவட்டத்தில், 500 கோடி ரூபாய் செலவில், மருத்துவமனை மற்றும் ஆய்வகம் கட்டப்படும். கட்டடம், மாணவர் விடுதி, ஊழியர்கள் தங்கும் விடுதிகள்
l நால்வடி உடையார் உருவாக்கிய, மைசூரு மருத்துவ மஹா வித்யாலயாவின், நுாற்றாண்டை நினைவுகூர, கே.ஆர்.மருத்துவமனை வளாகத்தில், 75 கோடி ரூபாய் செலவில் வெளி நோயாளிகள் பிரிவு கட்டடம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்