Change in tourism policy to attract investments | முதலீடுகளை ஈர்க்க சுற்றுலா கொள்கையில் மாற்றம்

சுற்றுலா

l கர்நாடகத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும், 2024 – 29 சுற்றுலா கொள்கையில் மாற்றம் செய்யப்படும்

l கொப்பால் மாவட்டத்தின் புராணம் மற்றும் வரலாறு முக்கியத்துவம் கொண்ட அஞ்சனாத்ரி மலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், சுற்றுலா துறையை வளர்ச்சி அடைய செய்ய, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு

l நீர் சாகச விளையாட்டை ஊக்குவிக்க, மாநிலத்தின் கடலோர பகுதிகள், அணைகளின் ‘பேக்வாட்டர்ஸ்’ பகுதிகள் பொது, தனியார் கூட்டமைப்பில் வளர்ச்சி அடைய செய்யப்படும்

l சாகச சுற்றுலாவை ஊக்குவிக்க, மாநிலத்தின் முக்கிய 10 சுற்றுலா பகுதியில், கேபிள் கார் அல்லது ரோப்வே வசதி செய்யப்படும்

l கோகாக் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணியரை கவர, பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்படும்

l மாநிலத்தின் 350 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், ‘3டி லேசர் ஸ்கேனிங்’ மூலம் டிஜிட்டலாக ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது. இத்தகைய முறையை நாட்டிலேயே கர்நாடகா செயல்படுத்தி உள்ளது

l கலபுரகி மாவட்டம், சித்தாபூர் தாலுகாவின் நாகவியில் ராஷ்டிரகுடாஸ் வம்சத்தினரால், ‘கர்நாடகாவின் முதல் பல்கலைக்கழகம்’ அமைந்ததாக, அப்பகுதியினர் நம்புகின்றனர். இது தொடர்பாக ஆராய்ச்சி செய்து, நினைவுச்சின்னங்களை சீரமைக்க, இந்திய தொல்லியில் துறையிடம் கேட்டுள்ளோம்

l பாகல்கோட்டில் ஐஹோலேயில், கர்நாடக மாநில சுற்றுலா துறை சார்பில் புதிய ஹோட்டல் கட்டப்படும். ரோரிச் மற்றும் தேவிகரணி எஸ்டேட் பகுதி கட்டமைப்பு சீரமைக்கப்படும்

l பீதர் மற்றும் விஜயபுராவில் ‘கரேஸ்’ என்று அழைக்கப்படும் பண்டைய குடிநீர் வினியோகத்துக்கு புத்துயிர் அளிக்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு

l ஜங்கிள் லாட்ஜ் மற்றும் சொகுசு விடுதி சார்பில் சுற்றுச்சூழல் சுற்றுலாவை ஊக்குவிக்க, பண்டிப்பூர், தண்டேலி, கபினியில் ‘விளக்கம் அளிக்கும் மையம்’ அமைக்க, 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.