Former Thai Prime Minister, whose sentence was reduced in the corruption case, will be released tomorrow | ஊழல் வழக்கில் தண்டனை குறைக்கப்பட்ட தாய்லாந்து மாஜி பிரதமர் நாளை விடுதலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பாங்காங்க்: ஊழல் வழக்கில் தாய்லாந்து மாஜி பிரதமர் தக்சின் ஷினவந்தரா,73வுக்கு தண்டனை காலம் குறைக்கப்பட்டதால், முன்கூட்டியே நாளை விடுதலையாகிறார்.

கடந்த 2001 முதல் 2006 வரை தாய்லாந்தின் பிரதமராக இருந்த ஷினவத்ரா தன் ஆட்சி காலத்தில் அரசு திட்டங்களில் பெருமளவு செய்த ஊழல் அம்பலமானதால் தண்டனையிலிருந்து தப்பிக்க நாட்டைவிட்டு தப்பியோடினார். 14 ஆண்டுகள் வெளிநாட்டிலிருந்துவிட்டு கடந்தாண்டு (2023) நாடு திரும்பினார்.

எனினும் இவர் மீதான குற்றச்சாட்டில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 2023 ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு எட்டு ஆண்டு சிறைத் தண்டனையை ஓராண்டாக மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் குறைத்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிறையில் இருந்த போது நன்னடத்தை காரணமாக பரோல் வழங்கப்பட்டதால், தண்டனை காலம் முடிய 6 மாதங்கள் உள்ள நிலையில் நாளை (பிப்.18) விடுதலையாகிறார் என தற்போதைய பிரதமர் ஸரேத்தா தவிசின் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.