மகளிர், குழந்தைகள் நலத்துறை
lபெண்களுக்கு ‘கிரஹ லட்சுமி’ திட்டத்தின் கீழ், மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 1.17 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர். இதுவரை 11,726 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு நடப்பாண்டு 28,608 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
l மாநிலத்தின் 20,000 அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
lஅங்கன்வாடி ஊழியர்களுக்கு, 75, 938 ஸ்மார்ட் போன்கள் வாங்க, 90 கோடி ரூபாய் செலவிடப்படும்.
l வாடகை கட்டடங்களில் இயங்கும், 1,000 அங்கன்வாடிகளுக்கு, சொந்த கட்டடம் கட்ட 200 கோடி ரூபாய் செலவிடப்படும்.
l அங்கன்வாடி ஊழியர்களுக்கு ‘கிராஜுவிடி சலுகை’ வழங்கப்படும்.
l கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டோரை பராமரிப்போருக்கு மாதம், 1,000 ரூபாய் ஊக்கத்தொகை
l திருநங்கையருக்கு ‘மைத்ரி’ திட்டத்தின் கீழ் வழங்கும் மாதாந்திர உதவித்தொகை 800 ரூபாயில் இருந்து, 1,200 ரூபாயாக உயர்த்தப்படும்.
l தேவதாசிகளுக்கு வழங்கப்படும், மாத உதவித்தொகை 1,500 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாக அதிகரிக்கப்படும். தேவதாசிகளுக்கு குடியிருப்பு கட்டித்தருவது உட்பட, மற்ற திட்டங்களுக்கு 428 கோடி ரூபாய் செலவிடப்படும்.
l சிறார்களின் நல திட்டங்களுக்காக, 2024 – 25ம் ஆண்டு, 54,617 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்