India vs England: தற்போது ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் விலகி உள்ளார். இந்த திடீர் முடிவால் இந்திய ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். அஸ்வினின் தயார் திடீரென உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனது அம்மாவிற்கு ஏற்பட்ட உடல்நல பிரச்சனை காரணமாக தனது குடும்பத்துடன் இருக்க அஸ்வின் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிசிசிஐ அஷ்வினுக்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், அஸ்வின் இடத்தில் யார் விளையாடுவார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
ஐசிசி சட்டம் என்ன?
அணியில் ஒரு வீரருக்கு காயம் அல்லது விலகும் நிலையில் மாற்று வீரர்களை இறக்குவது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சில விதிகளை வைத்துள்ளது. ஐசிசி விதிமுறைகளின்படி, பிளேயிங் 11ல் உள்ள ஒரு வீரருக்கு பதிலாக வரும் மாற்று வீரர், பீல்டிங் மட்டுமே பண்ண முடியும். மாற்று வீரர் பீல்டிங் செய்ய அனுமதிக்கப்படும் அதே வேளையில், பந்துவீச மற்றும் பேட்டிங் செய்ய முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். தலையில் அடிபட்டாலோ அல்லது வேறு சில அவசர காலங்களில் மட்டுமே அப்படி செய்ய அனுமதிக்கப்படுவர். அஸ்வின் வெளியேறியதால், இந்திய அணி தற்போது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி உள்ளது. இதனால் இந்தியா வேறு வழியில்லாமல் நான்கு பந்துவீச்சாளர்களை வைத்து மட்டுமே விளையாட வேண்டும்.
The rules don’t allow India to replace Ashwin with any other in the XI except perhaps if Ben Stokes and England management allow for a like-to-like substitution in exceptional circumstances and on humanitarian grounds. Knowing the way they’ve played their cricket I won’t be…
— Vikrant Gupta (@vikrantgupta73) February 16, 2024
மேலும், இங்கிலாந்து அணி மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அனுமதி அளித்தால் மாற்று வீரர் பவுலிங் மற்றும் பேட்டிங் ஆட முடியும் என்று சட்டம் கூறுகிறது. அஸ்வின் போல பந்து வீசும் ஆஃப்-ஸ்பின் பவுலர் வாஷிங்டன் சுந்தர் அணியில் உள்ளார். ஒரு வேலை இங்கிலாந்து அணி அனுமதித்தால் அவர் விளையாட முடியும். அப்படி அனுமதிக்கவில்லை என்றால் பீல்டிங் மட்டுமே செய்ய முடியும். 3வது போட்டி தவிர ராஞ்சி (பிப். 25-29) மற்றும் தர்மசாலா (மார்ச் 7-11) ஆகிய மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அஷ்வின் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் அஸ்வினுக்கு பதில் விளையாட போகும் வீரரை பிசிசிஐ தேடி வருகிறது.
500 விக்கெட் வீழ்த்திய அஸ்வின்
ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் அஸ்வின் 500வது விக்கெட்களை வீழ்த்தி சாதனை படித்துள்ளார். 500 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் அஷ்வின். நாதன் லயன் மற்றும் முத்தையா முரளிதரனை அடுத்து இந்த சாதனையை எட்டிய மூன்றாவது ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் ஆவார். குறைந்த போட்டிகள் மற்றும் பந்துகள் அடிப்படையில், வேகமாக இந்த சாதனையை படைத்த 2வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். நவம்பர் 2011ல் முதல் முறையாக டெஸ்ட் அணியில் இடம் பெற்றார். அஸ்வினை விட அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் நாதன் லயன் மட்டுமே.