The GST collection target is Rs 1.10 lakh crore | ஜி.எஸ்.டி., வசூல் இலக்கு ரூ.1.10 லட்சம் கோடி

வணிக வரிகள்:

நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், 2023 – 24 படி மொத்த ஜி.எஸ்.டி., வசூலில் கர்நாடக மாநிலம் 2வது இடத்தில் உள்ளது. ஜனவரி இறுதி வரை மாநில ஜி.எஸ்.டி., வரவு 58,180 கோடி ரூபாயாக உள்ளது. இது, கடந்த ஆண்டை விட 14 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

ஜி.எஸ்.டி., டேட்டாபேஸ் மேலாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்படுத்த புதிய பயன்பாட்டு விண்ணப்பம் உருவாக்கப்படும்.

வணிக வரித்துறையின் 2024 – 25ம் ஆண்டில், 1.10 லட்சம் கோடி வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2024 – 25ம் ஆண்டில், பதிவு மற்றும் முத்திரைத் துறைக்கு, 26,000 கோடி ரூபாயும்; கலால் துறைக்கு, 38,525 கோடி ரூபாயும்; மோட்டார் வாகன வரி வசூல் மூலம், போக்குவரத்து துறைக்கு, 13,000 கோடி ரூபாயும்; சுரங்கம் மற்றும் புவியியல் துறைக்கு, 9,000 கோடி ரூபாயும்; வருவாய் வசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.