Long-term action needed to improve air quality | காற்றின் தரத்தை மேம்படுத்த நீண்ட கால நடவடிக்கை தேவை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி, ”இந்தியாவில், காற்றின் தரத்தை மேம்படுத்த நீண்ட கால நடவடிக்கை தேவை. புகை கோபுரங்கள், வானிலை மாற்றியமைக்கும் தொழில்நுட்பம் போன்றவை இப்பிரச்னைக்கு நிலையான தீர்வு இல்லை,” என அமெரிக்க விஞ்ஞானி ரிச்சர்டு பெல்டியர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின், காற்று மாசுபாடு மற்றும் சுகாதார தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினரும், அமெரிக்க விஞ்ஞானியுமான ரிச்சர்டு பெல்டியர் அளித்த பேட்டி:

அமெரிக்காவில், கடந்த 1960ல், சுகாதாரமான காற்று தொடர்பான சட்டம் அமல்படுத்தப்பட்டது. 60 ஆண்டுகளுக்கு பின், தற்போது தான், அங்கு காற்றின் தரம் மேம்பட்டு உள்ளது.

எனவே, காற்று மாசு விவகாரத்தில் உடனடி தீர்வு காண முடியாது.

காற்று மாசை தீர்க்க, புகை கோபுரங்களின் பங்கு சிறியது தான். இதற்கு ஆகும் செலவு மற்றும் பராமரிப்பு போன்றவற்றால், முழு நகரத்துக்கும் அமல்படுத்துவது என்பது சாத்தியமற்றது.

மேலும், ‘கிளவுட் சீடிங்’ எனப்படும் வானிலையை மாற்றியமைக்கும் தொழில்நுட்பமும் இந்த விவகாரத்தில் நிலையான தீர்வை அளிக்காது. வானிலையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது; ஆனால், புகை வெளியேறுவதை கட்டுப்படுத்த முடியும்.

இந்தியாவில் காற்றின் தரத்தை மேம்படுத்த, புகை வெளியேறும் வழிகளை கண்டறிந்து அவற்றை ஒழுங்குபடுத்துவது மிக முக்கியம். காற்று மாசு பிரச்னையில், ஒரு நீண்ட கால நடவடிக்கை தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.