சென்னை:சட்டசபையில், 30,355.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய, 2023 – 24ம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை நேற்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
துணை மதிப்பீடுகள், 30,355.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கத்திற்கு வகை செய்கின்றன. இதில், 26,590.09 கோடி ரூபாய் வருவாய் கணக்கிலும், 3,499.98 கோடி ரூபாய் மூலதன கணக்கிலும், 265.25 கோடி ரூபாய் கடன் கணக்கிலும் அடங்கும்.
துணை மதிப்பீடுகளில், கூடுதல் நிதி ஒதுக்கப்படும் இனங்கள்:
தமிழக மின் வாரியத்திற்கு இழப்பீட்டு நிதியாக, 15,593.95 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது
‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட, சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு, ரொக்க நிவாரண நிதியாக, 1,486.93 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது
வெள்ளப் பெருக்கால், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ரொக்க நிவாரண உதவியாக, 541.37 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது
மகளிர் உரிமைத் தொகைக்கு கூடுதல் செலவினமாக, 1,055.34 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement