ஸ்மார்ட்போன் ஸ்லோவா இருக்கா? சூப்பர் ஃபாஸ்ட் ஆக இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

பொதுவா, நம்ம ஸ்மார்ட்போன் நம்ம லைஃப்ல ரொம்ப முக்கியமான இடத்தை பிடிச்சிருக்கு. இது இல்லாத வாழ்க்கை இல்லை என்ற நிலைக்கு இப்போது மக்கள் வந்துவிட்டார்கள். அலாரம் வைத்து தூங்கி எழுவது முதல் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை வரை சகல விஷயங்களையும் ஒரு மொபைல் வழியாகவே இப்போது எல்லோராலும் செய்து கொள்ள முடியும். எல்லாவற்றும் செயலி வந்துவிட்டது. மருத்துவ டிப்ஸ் கூட ஒரு செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம். 

நீங்கள் விரும்பும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ள மொபைல் இருந்தால் போதும். அப்படி இன்னொரு உறவாக நம்மிடம் இரண்டறக் கலந்துவிட்ட ஸ்மார்ட்போன்கள் கொஞ்சம் ஸ்லோவா ஆனாலோ, ஹேங் ஆனாலோ நமக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். கவலைப்படாதீங்க, அதற்கு ஒரு தீர்வு இருக்கு. எப்போது உங்கள் மொபைல் ஸ்லோவாக வொர்க் ஆக தொடங்குதோ, அப்போது நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் உடனடியாக மொபைலை ரீ ஸ்டார்ட் செய்ய வேண்டும். சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தால் அவை ஒரு ரீஸ்டார்ட்லயே சரி ஆயிடும்.

அடுத்து, உங்க ஃபோன் லேட்டஸ்ட் அப்டேட்டில் இருக்கான்னு பாருங்க. அப்டேட் இல்லன்னா, உடனே அப்டேட் பண்ணுங்க. ஓல்ட் அப்டேட்ல இருந்தா, ஃபோன் ஸ்லோவா வேலை செய்யலாம். மேலும், பழைய அப்டேட்டுகளில் இருக்கும்போது மால்வேர் அட்டாக் ஆகவும் வாய்ப்பு இருக்கு. ஹேக்கர்கள் பிடியில் மொபைல் சிக்கியிருக்க வாய்ப்பு இருக்கு என்பதால் எப்போதும் மொபைலை லேட்டஸ்ட் அப்டேட்டிலேயே வைத்திருப்பது நல்லது. 

அதற்கு அடுத்தபடியா, ஸ்டோரேஜ் ஃபுல்லா இருந்தாலும் ஃபோன் ஸ்லோவா ஆகிடும். அதனால, தேவையற்ற ஃபைல்களை எல்லாம் டெலிட் பண்ணுங்க. 40-50% ஸ்டோரேஜ் எப்பவும் காலியா இருக்கணும். அப்ஸ் எல்லாத்தையும் அப்டேட் பண்ணுங்க. ஓபன் செய்யாத அப்ஸ் எல்லாத்தையும் மூடிடுங்க. யூஸ் பண்ணாத அப்ஸ் எல்லாத்தையும் அன்இன்ஸ்டால் பண்ணுங்க.

அன்னோன் அப்ஸ், வை-ஃபை எல்லாம் யூஸ் பண்ணாதீங்க. இந்த டிப்ஸ் எல்லாம் ட்ரை பண்ணியும் ஃபோன் ஸ்லோவா இருந்தா, ஃபேக்டரி ரீஸ்டார்ட் பண்ணுங்க. அதுக்கு முன்னாடி, எல்லா முக்கியமான ஃபைல்களுக்கும் பேக்அப் எடுத்துக்கோங்க. வாரத்துக்கு ஒரு தடவை ஃபோனை ரீஸ்டார்ட் பண்ணுங்க. இப்படி எல்லாம் பண்ணா, உங்க ஃபோன் சூப்பர் ஃபாஸ்ட் ஆயிடும்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.