புதுடில்லி:துவாரகா துணை நகரத்தில், செயற்கை நீரூற்றுகள் மற்றும் மழைநீர் வடிகால்களை துணைநிலை கவர்னர் சக்சேனா திறந்து வைத்தார்.
டில்லி மேம்பாட்டு ஆணையம் சார்பில் தலைநகர் டில்லியை அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
துவாரகா துணை நகரத்தில், 300 கோடி ரூபாய் செலவில் செயற்கை நீரூற்று மற்றும் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை, டில்லி துணைநிலை கவர்னரும், டில்லி மேம்பாட்டு ஆணைய தலைவருமான சக்சேனா திறந்து வைத்தார்.
அப்போது, சக்சேனா கூறியதாவது:
தலைநகர் டில்லியை அழகுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள டில்லி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குறித்த காலக்கெடுவுக்குள் பணியை முடித்து வருகின்றனர். அதற்காக அவர்களைப் பாராட்டுகிறேன்.
துவாரகாவில் துாதரக பகுதி மற்றும் மாநில பவன்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
துவாரகா துணை நகரத்தை அழகுபடுத்தவும், காற்று மாசு பிரச்னையைத் தீர்க்கவும், ஒட்டுமொத்த சுற்றுச்சூழலை சீர்படுத்தும் பணியில் டில்லி மேம்பாட்டு ஆணையம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement