Sisodias bail plea will be heard on March 2 | சிசோடியா ஜாமின் மனு மார்ச் 2ல் விசாரணை

புதுடில்லி:மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனு மார்ச் 2ல் விசாரிக்கப்படுகிறது.

டில்லி அரசின் 2021 – 2022ம் ஆண்டுக்கான மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து, அதை ரத்து செய்த துணைநிலை கவர்னர் சக்சேனா, இதுகுறித்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டார்.

சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தன.

இந்த வழக்கில், டில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி 26ல் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதே விவகாரத்தில் நடந்த பணமோசடிக்காக அமலாக்கத் துறை கடந்த ஆண்டு மார்ச் 9ல் சிசோடியாவை கைது செய்தது.

இந்நிலையில், மருமகள் திருமணத்தில் பங்கேற்பதற்காக சிசோடியாவுக்கு நேற்று முதல் மூன்று நாட்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.

அதேநேரத்தில், சிசோடியாவின் ஜாமின் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், சிறப்பு நீதிமன்றத்தில் மார்ச் 2ம் தேதி விசாரிக்கப்படும் என நீதிபதி எம்.கே.நாக்பால் அறிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.