சென்னை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ வி ராஜு நோட்டிஸ் அனுப்பி உள்ளார். அதிமுகவில் இருந்து சமீபத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஏ வி ராஜு நீக்கப்பட்டார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூவத்தூர் விவகாரம் குறித்து சர்ச்சையான கருத்துகளைக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல திரையுலகினர் அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். ஏ.வி.ராஜுவுக்கு கடும் கண்டனங்கள் எழுப்பினர். தற்போது அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜு, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர் அந்த நோட்டிசில், “என்னைக் […]