Nawaz Sharif has been elected as the Chief Minister of Pakistan Punjab | பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வராக நவாஸ் ஷெரீப் மகள் தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டசபை தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி முதல்வராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெ ரீப் மகள் மரியம் நவாஸ் ஷெ ரீப் பதவியேற்றார்.

பாகிஸ்தான் பாராளுமன்றம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத்தேர்தல் கடந்த 8-ம் தேதி நடந்தது. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்நிலையில் பஞ்சாப் மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் சுயேட்சைகள் மரியம் நவாஸ் ஷெ ரீப் -க்கு ஆதரவு தந்தனர். இதையடுத்து பஞ்சாப் மாகாண முதல்வராக பதவியேற்றார். இதன் மூலம் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.