PAPA payload aboard Aditya-L1 detects solar wind impact of Coronal Mass Ejections | சூரிய காற்றின் எலக்ட்ரான் நிலை: ஆதித்யா எல்-1 கண்டுபிடிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், சூரிய காற்றின் எலக்ட்ரான்கள் நிலையை கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல் 1’ என்ற விண்கலத்தை கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இந்த ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்தும், சூரியினில் ஏற்படும் காந்த புயல்கள் குறித்தும் ஆய்வு செய்யும். சூரியனுக்கு மிக அருகில் உள்ள, ‘எல் 1’ எனப்படும், லெக்ராஞ்சியன் புள்ளியில் தற்போது நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

latest tamil news

தற்போது ஆதித்யா எல்-1 சூரிய காற்றின் எலக்ட்ரான்கள் நிலையை கண்டறிந்துள்ளது. விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள பாப்பா (PAPA) என்னும் கருவி பிப். 10, 11 ஆகிய தேதிகளில் எலக்ட்ரான் நிலையை கண்டறிந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரிய காற்றின் எலக்ட்ரான் மற்றும் அயனிகளை தொடர்ந்து ஆதித்யா எல்1 கண்காணித்து வருவதாகவும், விண்வெளி வானிலை நிலைகளை கண்காணிப்பதில் பாப்பா கருவி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.