ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்த நல்ல பாம்பு : அலறிய ஆல்யா
பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா. தற்போது இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. பரபரப்பான பல திருப்பங்களை சந்தித்து வரும் இந்த தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாம்பு ஒன்று புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் புகுந்த அந்த பாம்பை பார்த்து ஹீரோ ரிஷி உள்ளிட்ட குழுவினர் இது நல்ல பாம்பு என்று பதறுகிறார். இதை கண்டு ஆல்யாவும் பதற அதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் 'எங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் புது விசிட்டர்' என பகிர்ந்துள்ளார்.