நானியின் புதிய படம் அறிவிப்பு
தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகரான நானி கடைசியாக 'ஹாய் நான்னா' என்ற வெற்றிப் படத்தை கொடுத்தார். தற்போது 'சூர்யாவின் சனிக்கிழமை' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது நானி நடிக்கும் 32வது படமாகும்.
டி.வி.வி என்டர்டெயின்மென்ட் சார்பில் தனய்யா மற்றும் கல்யாண் தாசரி இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை இயக்குநர் சுஜீத் இயக்கவுள்ளார். சுஜீத் தற்போது பவன் கல்யாண் நடிக்கும் 'ஓஜி' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்து கொடுத்து விட்டு நானி படத்தை இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
ஆகஸ்ட்டில் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த ஆண்டு துவக்கத்தில் படம் வெளியாகிறது. ஒரு வன்முறையாளன் அகிம்சையாளனாக மாறினால், அவனது உலகம் தலைகீழாக மாறும். இதுதான் படத்தின் ஒன் லைன்.