கொப்பால் : இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த இருவருக்கு, கங்காவதி கூடுதல் மாவட்ட நீதிமன்றம், 20 ஆண்டு சிறை தண்டனையும், தலா 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பு அளித்தது.
உத்தர பிரதேச மாநிலம், பரூகாபாத்தை சேர்ந்தவர் மென்பொருள் பொறியாளர் ரோஹித் பிரமோத், ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மதனால் சைனி ஆகியோர், ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இதே நிறுவனத்தில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் பணியாற்றி வந்தார்.
இவர்கள் மூவரும் 2015ல், கர்நாடகாவுக்கு சுற்றுலா வந்தனர். கொப்பால் மாவட்டம், கங்காவதிக்கு வந்த மூவரும், இங்குள்ள ஹேமா விருந்தினர் மாளிகையில் ஒரே அறையில் தங்கினர்.
அன்றிரவு நடந்த பார்ட்டியில், இளம்பெண்ணுக்கு தெரியாமல், அவர் குடித்த குளிர்பானத்தில் போதைப் பொருளை இருவரும் கலந்துள்ளனர். அதை குடித்த இளம்பெண், உறக்கம் வருவதாக கூறி, அறைக்கு சென்றுவிட்டார்.
அப்போது இளைஞர்கள் இருவரும், இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். சம்பவத்துக்கு மறுநாள் காலை, தான் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்த இளம்பெண், கங்காவதி போலீசில் புகார் செய்தார்.
போலீசார், இரு இளைஞர்களையும் கைது செய்து, கங்காவதி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில், இருவர் மீதான குற்றச்சாட்டும் உறுதி செய்யப்பட்டது. இருவருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அபராதம் செலுத்த தவறினால், கூடுதலாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement