IPL 2024: ஐபிஎல் 2024 டிக்கெட்களை ஆன்லைனில் புக் செய்வது எப்படி?

IPL 2024 Tickets Online Booking: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த வாரம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது பதிப்பிற்கான முதல் பாதி அட்டவணையை வெளியிட்டது.  இந்தியாவில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் தேதிகள் வெளியான பிறகு மீதமுள்ள போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்படும். தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின் படி ஐபிஎல் 2024ன் முதல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது.  இந்த லீக்கின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.  இந்த போட்டி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் 2024ன் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் 10 மைதானங்களில் 17 நாட்கள் நடைபெற உள்ளன. மார்ச் 22 முதல் ஏப்ரல் 7 வரை போட்டிகள் நடைபெறும். மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு மீதமுள்ள ஐபிஎல் 2024ன் மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை அறிவிக்கப்படும்.  எனினும் பைனல் போட்டி மே மாதம் 26ம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த தொடர் முடிந்த அடுத்த 4 நாட்களில் டி20 உலக கோப்பை தொடர் தொடங்க உள்ளது.  இந்நிலையில், ஐபிஎல் 2024 போட்டிகளுக்கான டிக்கெட்களை எப்படி வாங்குவது என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

The wait is over 

for thematches of #TATAIPL 2024 is out!
Which fixture are you looking forward to the most pic.twitter.com/HFIyVUZFbo

— IndianPremierLeague (@IPL) February 22, 2024

இந்தியன் பிரீமியர் லீக் டிக்கெட்டுகள்:

பொதுவாகவே ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்களின் தேவை அதிகளவில் இருக்கும். சென்னையில் போட்டிகள் நடைபெறும் என்பதால் சொல்லவே வேண்டாம். இமாலய அளவிற்கு டிக்கெட் பிரஷர் இருக்கும். இந்தியன் பிரீமியர் லீக் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், மார்ச் முதல் வாரத்தில் இருந்து டிக்கெட் விற்பனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐபிஎல் 2024 டிக்கெட் விற்பனை குறித்து இன்னும் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. கடந்த ஆண்டை போலவே ரசிகர்கள் ஐபிஎல் இணையதளம் அல்லது BookMyShow தளங்களில் புக் செய்து கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2024 போட்டிகளின் டிக்கெட் விலை:

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விலை, சீட் வகை, போட்டியின் முக்கியத்துவம் மற்றும் நடைபெறும் மைதானம் போன்ற காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக, டிக்கெட் விலை சில ஆயிரங்களில் இருந்து லட்சம் ரூபாய் வரை இருக்கும். ரசிகர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு டிக்கெட்களை புக் செய்து கொள்ளலாம். ஐபிஎல் போட்டிகளுக்கான விக்கெட் விற்பனையை அந்த அந்த அணி நிர்வாகம் ஏற்றுக்கொள்கிறது. அவர்கள் தான் எவ்வளவு டிக்கெட்கள் விற்க வேண்டும், எவ்வளவு விலைக்கு விற்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்கின்றன.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.