Reliance-Disney Merger Update: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்ட் டிஸ்னி ஆகிய நிறுவனங்களுக்கு இடையே டீல் இறுதியாகிவிட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில் நீட்டா அம்பானிக்கு கொடுக்கப்படும் புதிய பொறுப்புகள் குறித்த விவரங்கள் எல்லாம் வெளியாகி இருக்கிறது. அதாவது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டிஸ்னி மெர்ஜர் டீல் முடிவில் புதிய கம்பெனி ஒன்று உருவாக இருக்கிறது. அந்த கம்பெனிக்கு ரிலையன்ஸ் தலைவரும் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மனைவியான நீதா அம்பானி அந்த நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் – டிஸ்னி டீல் என்ன?
முகேஷ் அம்பானியின் Reliance Industries மற்றும் Viacom 18 நிறுவனங்களுடன் Walt Disney நிறுவனம் இணைந்து புதிய நிறுவனம் உதயமாகிறது. ஒப்பந்தத்தின் படி, Viacom18 நிறுவனத்தின் சேனல்களை Star India நிறுவனத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டு நிறுவனத்தில் சுமார் 11,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய Reliance நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அதேநேரத்தில் குழும பங்குகளில் ரிலையன்ஸ்16.34 பங்குகளையும், வியாகாம் நிறுவனம் 46.82 பங்குகளை வைத்திருக்கும். டிஸ்னி குழுமம் 36.84 விழுக்காடு பங்குகளை வைத்துக் கொள்ள இருக்கிறது.
ரிலையன்ஸ் மெகா திட்டம்
ரிலையன்ஸ் நிறுவனம் மீடியா மற்றும் கம்யூனிகேஷன்ஸ் துறைகளில் தங்களுடைய முழு கவனத்தையும் திருப்பி இருக்கிறது. ஏற்கனவே ஜியோ நெட்வொர்க் மூலம் இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமாக மாறியிருக்கும் நிலையில், இப்போது மீடியா துறையிலும் கொடி கட்டி பறக்க திட்டமிட்டிருக்கிறது. அதன்படி, தொலைக்காட்சிகள், ஓடிடி பிளாட்பார்ம்களில் புதிய புரட்சியை இந்தியாவில் ஏற்படுத்தும் நோக்கில் டிஸ்னி குழுமத்துடன் மிகப்பெரிய டீலை ஓகே செய்திருக்கிறது. இனி இந்தியாவின் மீடியா மற்றும் சினிமா துறையில் ரிலையன்ஸ் மிகப்பெரிய ராஜ்ஜியத்தை செய்ய இருக்கிறது.