வெல்லிங்டன்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை வெல்லிங்டனில் தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து நியூசிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டெவான் கான்வே விலகி உள்ளார்.
நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியின்போது அவர் இடது கை கட்டை விரலில் காயம் அடைந்தார். அவரது காயம் இன்னும் குணமடையாததால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக முதல் டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் ஹென்றி நிக்கோல்ஸ் இடம் பெற்றுள்ளார்.