ஒரு வரி பேச, அமிதாப்புக்கு 2 கோடி, மகேஷ் பாபுக்கு 5 கோடி சம்பளம்
தற்போதெல்லாம் பணபுழக்கம் முடிந்து எல்லாமே ஆன்லைன் பரிவர்த்தனைகளாக மாறி வருகிறது. கடைகளில், பெட்ரோல் பங்குளில் உள்ளிட்ட எந்த இடத்திலும் ஸ்கேன் செய்து பணம் செலுத்தும்போது 'இத்தனை ரூபாய் பெறப்பட்டது' என்கிற குரல் ஒலிக்கும், பணத்தை பெறுபவர்கள் கவனத்திற்காக இந்த ஏற்பாடு. இதற்கான செயலிகள் ஏராளமாக வந்திருக்கிறது. அவைகளுக்கு இடையே வியாபார போட்டியும் இருக்கிறது. இவற்றை யுபிஐ செயலி என்று அழைக்கிறார்கள்.
இந்த நிலையில் ஒரு முன்னணி யுபிஐ செயலி ஒன்று பண பரிவர்த்தனைகள் பற்றி அறிவிக்க அமிதாப் பச்சனையும், தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவையும் அணுகியது. 'இவ்வளவு ரூபாய் பணம் பெறப்பட்டது' என்ற ஒரு வரியை பேச அமிதாப்பச்சனுக்கு 2 கோடியும், மகேஷ் பாபுவுக்கு 5 கோடியும் சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாக தவல்கள் வெளியாகி உள்ளது.