தேசிய இப்தார் நிகழ்விற்கு செலவிடப்படும் பணம் காஸா மோதலினால் இடம்பெயர்ந்த குழந்தைகளின் சுகாதார நலனுக்காக வழங்கப்படும் – ஜனாதிபதி அறிவுறுத்தல்

காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக (Children of Gaza Fund) இனை காஸாவில் நிறுவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

அதன்படி இப்தார் நிகழ்வுகளுக்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களினால் ஒதுக்கப்படும் தொகையை இந்த நிதியத்திற்கு பெற்றுத்தருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

இதற்காக மக்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரிதிநிதியூடாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களும் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.

இதன்படி, தங்களின் நன்கொடைகளை 11.04.2024 க்கு முன்னர், இலங்கை வங்கியின் (7010), தப்ரோபன் (747) கிளைகளில் 7040016 எனும் கணக்கு இலக்கத்திற்கு “ஜனாதிபதியின் செயலாளர்” என்ற பெயரில் வைப்பிலிடுமாறும், அதற்கான பற்றுச்சீட்டை 077- 9730396 எனும் இலக்கத்திற்கு WhatsApp ஊடாக அனுப்பி வைக்குமாறும் ஜனாதிபதி செயலகம் கேட்டுக்கொள்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.