பாஜக பெயரில் தேர்தல் பத்திரங்கள் வாங்குவதாகக் கூறி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியிடம் இருந்து 2.5 கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள பிலிம் நகர் காவல் நிலையத்தில் முன்னாள் நீதிபதி அளித்துள்ள புகாரில், “ஹைதராபாத்தைச் சேர்ந்த சரத் ரெட்டி மற்றும் நரேந்திரா என்ற இரண்டு நபர்கள் எனது மருமகன் மூலம் எனக்கு பரிச்சயமானார்கள்.” “உலக இந்து காங்கிரசுடன் தனக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிக்கொண்ட சரத் ரெட்டி, தாங்கள் இருவரும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் என்றும் […]