கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2011-16ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது டென்டர் விடுவதில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
அதன் பெயரில் பன்னீர்செல்வம், அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று(பிப்.28) காலை பண்ருட்டி மற்றும் சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீஸார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.