பமாகோ,
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டின் அண்டைநாடாக பர்கினோ பாசா அமைந்துள்ளது.
இந்நிலையில், மாலியின் கெனிபியா பகுதியில் இருந்து நேற்று மாலை 5 மணியளவில் அண்டை நாடான பர்கினோ பாசோவுக்கு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
கெனிபியா பகுதியில் உள்ள பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலத்தை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.