அநுராதபுர மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட கௌரவ உத்திக பிரேமரத்ன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யும் கடிதத்தை பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன அவர்களிடம் (27) கையளித்துள்ளார்.
அதற்கமைய, 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1) ஆம் பிரிவின் பிரகாரம் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ உத்திக பிரேமரத்ன அவர்களின் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக செயலாளர் நாயகத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்படும்.