நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் நிறுவனம், இந்திய மார்கெட்டில் அதிகம் விற்பனையாகும் பல்சர் பைக்குகள் குறித்த புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. ஒரே நேரத்தில் பல்சர் என்எஸ்160 மற்றும் பல்சர் என்எஸ்200 ஆகியவற்றை முற்றிலும் புதிய அவதாரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு பைக்குகளிலும் பஜாஜ் நிறுவனம் சில புதிய மாற்றங்களைச் செய்துள்ளது. இது முந்தைய மாடல்களை விட இன்னும் சிறப்பாக இருக்கிறது.
புதிய பல்சர் பைக்குகள் விலை
புதிய ஸ்டைல் மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் கூடிய பல்சர் என்எஸ்160 -ன் ஆரம்ப விலை ரூ.1.46 லட்சமாகவும், பல்சர் என்எஸ்200யின் விலை ரூ.1.57 லட்சமாகவும் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டு பைக்குகளிலும் என்ன மாற்றங்கள் காணப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்வோம்.
புதிய பல்சர் பைக்குகளின் ஸ்டைல்
பஜாஜ் இரண்டு பைக்குகளிலும் புதிய எல்இடி ஹெட்லைட் அமைப்பை வழங்கியுள்ளது. இருப்பினும் இந்த ஹெட்லைட்கள் முன்பு போலவே உள்ளன. ஆனால் அவைகளுக்குள் மாற்றங்கள் சில செய்யப்பட்டுள்ளன. இவற்றில் LED பகல்நேர விளக்குகள் (DRL’s) கொடுக்கப்பட்டுள்ளன. இது தவிர, பைக்குகளின் பாடியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
பைக்குகள் என்ஜின் மாற்றம்
இரண்டு பைக்குகளின் எஞ்சின் முறையில் எந்த மாற்றமும் இல்லை. NS 160-ல் நிறுவனம் 17.03 bhp ஆற்றலையும் 14.6 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் உருவாக்கும் அதே 160 cc இன்ஜினையே வழங்கியுள்ளது. இது 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. NS 200 இல், நிறுவனம் 199 cc சிங்கிள் சிலிண்டர் எஞ்சினை வழங்கியுள்ளது. இது 24.13 bhp மற்றும் 18.74 Nm டார்க்கை உருவாக்குகிறது. இதில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.
புதிய டெக்னாலஜி என்ன?
பஜாஜ் ஆட்டோ இரண்டு பைக்குகளிலும் ஒரு புதிய டிஜிட்டல் டிஸ்ப்ளேவை வழங்கியுள்ளது. அவற்றின் கருவி கன்சோலில் ஸ்பீடோமீட்டர், ஆர்பிஎம் மீட்டர், ஓடோமீட்டர், எரிபொருள் நிலை மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பு போன்ற அம்சங்கள் உள்ளன. NS 160 மற்றும் NS 200 -ல், ஸ்மார்ட்போன் இணைப்புடன் அழைப்பு அல்லது செய்தி அறிவிப்பு வசதியையும் இதில் வழங்கப்படுகிறது. அதாவது பைக் ஓட்டும் போது வார்னிங் மெசேஜ்களும் உங்களுக்கு கிடைக்கும்.
பைக்கின் பிரேக் சிஸ்டம்
இரண்டு பைக்குகளின் ஹார்டுவேரைப் பொறுத்த வரையில், முன்புறத்தில் அப்-சைட் டவுன் ஃபோர்க் (USD) மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளது. முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்துடன் (ஏபிஎஸ்) டிஸ்க் பிரேக்கும் உள்ளது. இதில் 17 இன்ச் வீல்களை நிறுவனம் வழங்கியுள்ளது.