திருவனந்தபுரம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கேரளாவில் 16 இடங்களில் போட்டியிட உள்ளது. அரசியல் கட்சிகள் மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தொகுதி பங்கீட்டில் ஈடுபட்டு உள்ளன. மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஒருபுறமும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி மறுபுறமும் இதற்கான பணியை மேற்கொண்டு வருகின்றன. கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான வி.டி. சதீசன் இன்று, ”கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான போட்டியில் 16 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும். தவிர கூட்டணியில் 2-வது பெரிய கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்களும், கே.சி.ஜே. […]