மலையாள சீரியலை விட்டு வெளியேறிய லெட்சுமி பிரியா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடரில் காவேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் லெட்சுமி பிரியா. முன்னதாக திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வந்த இவர், தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரையில் நடித்தார். அவ்வாறாக தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்தில் சந்திரகாந்தம் என்கிற தொடரிலும் லீட் ரோலில் நடித்து வந்தார். தற்போது அந்த சீரியலை விட்டு விலகியுள்ளார். இதனால் அவர் மகாநதி தொடரிலிருந்தும் விலகிவிடுவாரா? என தமிழ் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். எனினும் மகாநாதி சீரியலிலிருந்து லெட்சுமி பிரியா விலகுவதாக எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.