வரும் மார்ச் 2025-ல் விற்பனைக்கு வெளியாக உள்ள ஸ்கோடா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி காரை பற்றி முக்கிய தகவல்களை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
9 லட்சத்திற்கும் குறைவான விலையில் தொடங்க உள்ள இந்த காரானது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளதால் மிகவும் சவாலான விலையில் அமைந்திருக்கும்
4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த மாடாலானது இந்திய சந்தையில் கிடைக்கின்ற மிகக் கடுமையான போட்டியாளர்களான டாடா நெக்ஸான், ஹூண்டாய் வெனியூ, கியா செல்டோஸ் உள்ளிட்ட மாடல்களை எதி ர்கொள்வதுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 300, மாருதி சுசூகி பிரெஸ்ஸா ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.
115hp பவரை வழங்குகின்ற 1.0 லிட்டர் பெட்ரோல் டர்போ என்ஜின் 170 Nm டார்க் பெற வாய்ப்புள்ளது. 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கன்வெர்ட்டர் கியர் பாக்ஸ் எனது பெறலாம்.
இந்த எஸ்யூவி காருக்கான பெயர் அனேகமாக Kwiq, Kymaq, Kylaq, Kariq, மற்றும் Kyroq ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.