விஜய் அரசியலுக்கு வருவது உலகத்துக்கே மகிழ்ச்சி : சஞ்சீவ்
நடிகர் விஜய்யின் தோழரான நடிகர் சஞ்சீவ் பல திரைப்படங்களில் விஜய்யுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். அதன்பின் சின்னத்திரையில் களமிறங்கி அதில் முன்னணி நடிகராக பயணித்து வருகிறார். இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய போது, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து நண்பர் என்ற முறையில் சஞ்சீவிடமும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சஞ்சீவ், 'விஜய் அரசியலுக்கு வருவது உலகத்துக்கே மகிழ்ச்சியாக இருக்கும். எங்களுக்கும் மகிழ்ச்சியாகவே இருக்கும். விஜய் அரசியலுக்கு வந்தால் நல்லதே நடக்கும்' என்று கூறியுள்ளார்.